(றிஸ்வான் சாலிஹு)
குவைத் நாட்டின் "அல்-நஜாத் அறக்கொடை" நிறுவனத்தின் நிதியுதவியுடன் இலங்கையிலுள்ள அந்-நூர் சரிட்டி நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு நன்கொடையாக வழங்கும் சேவைகளின் ஒன்றான கட்டி முடிக்கப்பட்ட சுமார் 550,000.00 ரூபா பெருமதியுடைய வீடொன்றை அட்டாளைச்சேனை-08 ஆம் பிரிவில் உள்ள வசதி குறைந்த குடும்பம் ஒன்றிற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
ஞாயிற்றுக்கிழமை (11) மாலை இலங்கை அந்-நூர் சரிட்டி நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எஸ்.எம்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,பிரதம விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் எஸ்.சீ.எம்.றியாஸ் அவர்களினால் வீட்டிற்கான நினைவுப் பதாகை திறந்து வைக்கப்பட்டு உரியவர்களிடம் உத்தியோகபூர்வமாக இவ்வீடு கையளிக்கப்பட்டது.
இவ்வீட்டை தந்துதவிய குவைத் நாட்டின் அமைப்பு மற்றும் இலங்கையில் உள்ள அந்-நூர் சரிட்டி நிறுவனத்திற்கும் தங்களது மனப்பூர்மான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாகவும் இந்த பயனாளிகள் தெரிவித்துக் கொண்டார்கள்.
அந்-நூர் சரிட்டி அமைப்பு இலங்கையில் உள்ள சகல இன மக்களுக்கும் அத்தியாவசிய தேவைகளுடைய வேலைத் திட்டங்களை செய்து வரும் ஓர் அமைப்பாகும் என்பதோடு, இவ் அமைப்பின் முக்கியஸ்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச இணைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
July 12, 2021
Rating:






