(றிஸ்வான் சாலிஹு)
லக்கி விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து கிரிக்கெட் அணிக்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்றிரவு (11) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பரா சொப்பிங் மண்டபத்தில் இடம் பெற்றது.
லக்கி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும். சிரேஸ்ட ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கெளரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் வை.எல்.நியாஸ், மக்கள் காங்கிரஸ் ஒலுவில் அமைப்பாளர் எம்.ஜே.எம். அஸ்ஹர், லக்கி விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் கியாஸ் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களினால் புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் சகல வீரர்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
