பொருளியலில் கலாநிதி பட்டம் பெற்ற திட்டமிடல் சேவை அதிகாரி அஸ்லம்!!

(றிஸ்வான் சாலிஹு)

இலங்கை திட்டமிடல் சேவை அதிகாரி , ஏ.எல்.எம்.அஸ்லம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியல்  துறையில் கலாநிதி ( PhD. In Economics) பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் கலாநிதி பட்டத்தைப் பெற்ற நமது பிரதேசத்தை சேர்ந்த முதலாவது நபர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல் துறையில் முதலாம் வகுப்பு சித்தியைப் பெற்ற முதல் பட்டதாரியும் இவராவார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக தற்போது கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.





பொருளியலில் கலாநிதி பட்டம் பெற்ற திட்டமிடல் சேவை அதிகாரி அஸ்லம்!! பொருளியலில் கலாநிதி பட்டம் பெற்ற திட்டமிடல் சேவை அதிகாரி அஸ்லம்!! Reviewed by Editor on July 19, 2021 Rating: 5