ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன் அவர்களின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் 300 இலவச குடி நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான இர்சாத் இமாமுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க கிண்ணியா பிரதேசத்திற்கு 100க்கும் மேற்பட்ட இலவச குடி நீர் இணைப்புகள் வழங்கும் நிகழ்வு இன்று (20) செவ்வாய்க்கிழமை கிண்ணியா நீர்வழங்கள் சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் கெளரவ மரைக்கார் அவர்களும், கட்சியின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் றாஸிக் றியாஸ்தீன், கிண்ணியா நீர்வழங்கள் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி ஜனாப். றிபாஸ், ஊடகவியலாளர் இர்ஸாத் இமாமுத்தீன் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
July 20, 2021
Rating:




