இணையவழி கற்பித்தலில் இருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து ஆசிரியர்கள் விலக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர், நீதிமன்ற உத்தரவைக் கருத்திற்கொள்ளாமல், தனிமைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஆசிரியர் சங்கங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் வரை, இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியிருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.






இணையவழி கற்பித்தலில் இருந்து விலகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!!! இணையவழி கற்பித்தலில் இருந்து  விலகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவிப்பு!!! Reviewed by Editor on July 09, 2021 Rating: 5