காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திகுழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹாபிஸ் நஸீர் அகமட் தலைமையில் இன்று (14) புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேசத்தில் இடம்பெறவுள்ள அபிவிருத்திகள் வழங்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் கடந்த கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.
திணைக்கள தலைவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நகர சபை உறுப்பினர்கள், உதவிபிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பல அரச உயர் அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் கொரோனா காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட உத்தியோகதர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 14, 2021
Rating:


