Dear moon என்ற திட்டத்தின் கீழ் நிலவுக்கு பயணம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ள இறுதியான முழு அணியில் இலங்கையை சேர்ந்த சந்தனி குமாரசிங்க என யுவதி இடம்பெற்றுள்ளார்.
இத்திட்டத்திற்காக 249 நாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஒரு மில்லியன் விண்ணப்பங்களில் 17 பேரின் விண்ணப்பங்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் அவர்களில் 8 பேருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் இந்த குழுவினர் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு நிலவுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது 2019 ஆம் ஆண்டு சந்தனி குமாரசிங்கவுக்கு அமெரிக்காவின் நாசா நிறுவனத்தில் விண்வெளி மற்றும் விண்வெளி வீரருக்கான பாடநெறியை கற்க புலமைப்பரிசில் கிடைத்தது. அந்த பாடநெறியை கற்பதற்கு தனக்குள்ள பொருளாதார சிரமங்கள் குறித்து சந்திது தெரியப்படுத்தியபேது அடுத்து சந்தலிக்கு உதவிகளை வழங்கியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சாந்தலி சந்தித்து தனது பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
July 18, 2021
Rating:


