(அலுவலக செய்தியாளர்)
புத்தளம், கற்பிட்டி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பின்வரும் பிரதேசங்களில் Covid 19 தடுப்பூசியானது வியாழக்கிழமை (22) வழங்க ஏற்பாடாகியுள்ளது என்று புத்தளம் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
எனவே, இச்சந்தர்ப்பத்தினை நழுவ விடாது உங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளுமாறும் பொதுமக்களை பிரதேச செயலகம் கேட்டுக் கொள்கின்றது.
அதனடிப்படையில், புத்தளம் பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளான புத்தளம் தெற்கு, மணல் தீவு, புத்தளம் கிழக்கு, தில்லையடி, அட்டவில்லு, மத்தியஅட்டவில்லு மற்றும் பாலாவி ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் 20ஆம் திகதி கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு 22ஆம் திகதி pfizer தடுப்பூசி பின்வரும் நிலையங்களில் வழங்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பிரதேச செயலகம்
1. புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி
2. புத்தளம் பிரதேச செயலகம்
கற்பிட்டி பிரதேச செயலகம்
1. கற்பிட்டி MOH காரியாலயம்
2. கன்டகுழி முஸ்லிம் வித்தியாலயம்
3. நுரைச்சோலை முஸ்லிம் வித்தியாலயம்.
4. கரம்பை உழுக்காப்பல்லம் வித்தியாலயம்.
 
        Reviewed by Editor
        on 
        
July 22, 2021
 
        Rating: 
 
