அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய அதி தீவிர சிகிச்சை பிரிவு(ICU), விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வறை (Consultant Longue), வைத்தியசாலை நூலகம்(Hospital Library) மற்றும் பிசியோதெரபி பிரிவு (Physiotherapy unit) என்பன இன்று (03) சனிக்கிழமை கௌரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எம்.ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற நாற்பெரும் இந்திறப்பு விழாவில் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை நலன்விரும்பிகள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தேசிய காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ அல்ஹாஜ்.ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் முழு முயற்சியினால் இன்று தலை நிமிர்ந்திருக்கும் இந்த வைத்தியசாலையானது இப்பிராந்திய பொதுமக்களின்  சுகாதார, மருத்துவ, ஆரோக்கிய சேவைகளை சிறப்பாக நிறைவேற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.






அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்!! அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகள்!! Reviewed by Editor on July 03, 2021 Rating: 5