(றிஸ்வான் சாலிஹு)
அரசாங்கத்தின் ஒரு இலட்சம் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று காரியப்பர் வீதி தொடக்கம் ஜின்னா வீதி வரையிலான 2150 மீற்றர் வீதி அபிவிருத்தி நிர்மாண பணிகளின் அங்குரார்ப்பண நிகழ்வு அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களினால் அக்கரைப்பற்று-05 ஹிஜ்ரா பாடசாலை வீதியில் இருந்து இன்று (03) சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கௌரவ மாநகர சபை உறுப்பினர் அஸ்மி அப்துல் கபூர், அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தொழில் நுட்ப உத்தியோகத்தர் இம்றூஸ், அக்கரைப்பற்று 05 கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் ஹிஜ்ரா விளையாட்டு கழக நிர்வாகிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர் என்று முதல்வரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Editor
on
July 03, 2021
Rating:



