மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் அழைப்பின் பேரில் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலிசப்ரி அவர்கள் சனிக்கிழமை (10) மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா ,ஏறாவூர் , காத்தான்குடி ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார்.
முதற்கட்டமாக கொவிட் 19 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் சூடுபத்தினசேனை மையவாடிக்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமைகளை அறிந்து கொண்டனர்.
இதில் ஒரு அங்கமாக சூடுபத்தினசேனை மையவாடிக்கு ஜனாஸா அடக்கும் செயற்பாட்டிற்காக ஒரு ஜேசிபி (JCB) இயந்திரம் தேவையாக இருந்த போது கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கண்டி பள்ளிவாயல்கள் சம்மேளனத்தினால் ஒரு ஜேசிபி (JCB) இயந்திரமும், 500 மீஸான் கட்டைக்கான கொடுப்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இக்கையளிப்பு நிகழ்வில் கெளரவ நீதி அமைச்சர் அலிசப்ரி அவர்களும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ மர்ஜான் பளீல், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ இஸ்ஹாக் றகுமான், கொவிட் 19 தொற்று தடுப்பு செயலணியின் ஜனாதிபதியின் இணைப்பாளர் வைத்திய கலாநிதி அன்வர் ஹம்தானி , ஓட்டமாவடி பிரதேச சபை தலைவர் நௌபர், பிரதேசசபை உறுப்பினர்கள், பிரதேசசபை செயலாளர் சிஹாப்தீன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் எஸ்.எம் அல் அமீன் , உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரியாஸ்,கண்டி பள்ளிவாயல்கள் முஸ்லிம் சம்மேளனத் தலைவர் சித்திக் ஹாஜி, தனவந்தர் அப்சால் ஹாஜி, ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை பள்ளிவாயல்களின் தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
