அமெரிக்க தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்!!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (15)  வியாழக்கிழமை காலை இலங்கைக்கான அமெரிக்க தூதுவருடன் விசேட சந்திப்பில் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில், தமிழ் தேசிய பிரச்சனைக்கான தீர்வு சம்பந்தமாக இலங்கை தமக்கும் வழங்கியிருக்கும் வாக்குறுதிகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பதை தாம் தொடர்ந்து வலியுறத்துவதாக அமெரிக்க தூதுவர் உறுதியளித்தாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




அமெரிக்க தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்!!! அமெரிக்க தூதுவரை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்!!! Reviewed by Editor on July 15, 2021 Rating: 5