குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல்.

(றிஸ்வான் சாலிஹு)

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தின் ஊடாக COVID-19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கியின் நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெரியமடு கிழக்குப் பகுதிகள் 11.4 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட இருக்கின்ற விவசாயிகளின் உற்பத்தி பொருட்களைப் பாதுகாக்கும் குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல்லை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களினால் இன்று (15) வியாழக்கிழமை அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல், மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் திரு.என்.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.மகேஸ்வரன், மாகாண விவசாய பணிப்பாளர் திரு.சிவகுமார், மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஜனாப்.ஷுகூர், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான எ.ஸி.நௌபில் மற்றும் பி.என். லாபிர் ஆகியோருடன் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல். குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை அமைப்பதற்கான அடிக்கல். Reviewed by Editor on July 15, 2021 Rating: 5