(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)75 வது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாட இருக்கும் இத் தருணத்தில்தேசிய காங்கிரஸின் தலைவர் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலையின் முழுமையான அபிவிருத்தியின் எஞ்சியுள்ள பகுதியை விட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்க விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக, அவற்றை நிறைவு செய்யும் நோக்கோடு ஏற்பாடு செய்யப்பட்ட விரிவான கலந்துரையாடல் இன்று (04) ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் ஏ.பீ.முஜீன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், அக்கரைப்பற்று கெளரவ மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக், பாடசாலை முகாமைத்துவ சபை உறுப்பினர்கள், நிறைவேற்று அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் , பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மூத்த ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் பங்கு பற்றியமை குறிப்பிடதக்கது .
