(றிஸ்வான் சாலிஹு)
அரசின் செளபாக்கியா வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஜமாஅத் ஆலிம் நகர் கிராமம் ஆடு வளர்ப்பிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கான அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (05) திங்கட்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இச்செயற்திட்ட ஞாபகார்த்த நினைவுப் பதாகையை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கெளரவ டப்ளியு. டீ.வீரசிங்க அவர்களின் அக்கரைப்பற்று இணைப்பதிகாரி ஏ.எம்.நிஹால் அவர்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக், அக்கரைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர், கால்நடை வைத்திய அதிகாரி, பள்ளிவாசல் தலைவர் மற்றும் கிராம மக்களும் இதில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
