(றிஸ்வான் சாலிஹு)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு எதிர்வரும் 08ஆம் திகதி (வியாழக்கிழமை) வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இன்று (05) திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தில் இவரின் வழக்கு ஸவிசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து தவிர்த்து கொள்வதாக அறிவித்ததை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம்.சஹீட், ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலி ஆகியோர் ஆஜாராகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
