இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திருமதி. நஹிஜாவுக்கு பிரியாவிடை!!!

இறக்காமம் பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்கு இடமாற்றலாகி செல்லும் உதவிப்பிரதேச செயலாளர்  சட்டத்தரணி திருமதி பாத்திமா நஹீஜா முஸப்பிர் அவருக்கான சேவை பாராட்டும் பிரியாவிடை நிகழ்வும் நேற்று (26) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச எல்லைக்குட்பட்ட அனைத்து கிராம உத்தியோகத்தர்களினதும் ஏற்பாட்டில் நடைபெற்ற பகல் போசனமும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றதோடு, இவரது அர்ப்பணிப்புகளுடனான சேவைகளைப் பாராட்டி பென்னாடை போர்த்தியும் வாழ்துப்பத்திரங்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கியும் அவர் கௌரவிக்கப்பட்டார்.







இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திருமதி. நஹிஜாவுக்கு பிரியாவிடை!!! இலங்கை நிர்வாக சேவை அதிகாரி திருமதி. நஹிஜாவுக்கு பிரியாவிடை!!! Reviewed by Editor on July 27, 2021 Rating: 5