கலாநிதி ஹனிபா இஸ்மாயில் எழுதிய இரு நூல்கள் வெளியீடு!!!

(றிஸ்வான் சாலிஹு)

தமிழ்ப்பட்டறை இலக்கிய பேரவை வெளியீட்டு வைக்கும், அக்கரைப்பற்றைச் சேர்ந்த உதவிக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி ஹனிபா இஸ்மாயில் எழுதிய " கிழக்கிலங்கை கவி மரபு மற்றும் ஈழத்து நாட்டார் பாடல் மரபில் கவிகள்" இரண்டு நூல்களில் வெளியீட்டு விழா எதிர்வரும் 2021.07.31 சனிக்கிழமை காலை 9.30மணிக்கு அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் (தேசிய பாடசாலை) இடம்பெறவுள்ளது.

கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் (நளீமி) அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப்பல்கலைகழக முன்னாள் மொழித்துறை தலைவர் பேராசிரியர் செ.யோகராசா அவர்களும் கெளரவ அதிதிகளாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.காசீம், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, பட்டய நில அளவையாளர் ஏ.எல்.முகைடீன் பாவா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.அகமட் கியாஸ் ஆகியோரும் மற்றும் சிறப்பதிகளாகவும் கல்வியாளர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் நேரலை (facebook live) ceyloneast.com  முகநூல் பக்கத்தினூடாக செய்யப்படும்.



கலாநிதி ஹனிபா இஸ்மாயில் எழுதிய இரு நூல்கள் வெளியீடு!!! கலாநிதி ஹனிபா இஸ்மாயில் எழுதிய இரு நூல்கள் வெளியீடு!!! Reviewed by Editor on July 27, 2021 Rating: 5