சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மக்கள் மயப்படுத்தப்படவுள்ள மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு விஜயம் செய்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலையத்தினை இன்று (01) வியாழக்கிழமை பார்வையிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் விமான போக்குவரத்தினை இலகுபடுத்தி சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அமைச்சர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இராஜாங்க அமைச்சர்களான டீ.வீ.சனகா, எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வந்து செல்லவும், குறைந்த செலவில் விமானப்பயணங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
