(றிஸ்வான் சாலிஹு)
கிழக்கில் கோவிட்-19 அச்சுறுத்தல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அதிகபட்ச சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுடன் ஹஜ் பெருநாள் தொழுகை உள்ளிட்ட இதர கடமைகளை அக்கரைப்பற்று பிராந்திய பொதுமக்கள் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(19) திங்கட்கிழமை அக்கறைப்பற்று பிரதேச சுகாதரா வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் அக்கரைப்பற்று மாநகர கெளரவ முதல்வர் அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசீக், அக்கறைபற்று ஜம்மியதுல் உலமா சபை உறுப்பினர்கள், பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகள், பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள்,மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
July 19, 2021
Rating:




