அக்கரைப்பற்றில் ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கல்...

(றிஸ்வான் சாலிஹு)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைக்குட்பட்ட 13 சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் மற்றும் ஏனைய விசேட நிலையங்களில் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தலைமையில் இன்று முதல் (சனிக்கிழமை -24) சினோபாம் கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை உத்தியோபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி (தேசிய பாடசாலை), அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை), ஆயிஷா மகளிர் கல்லுாரி (தேசிய பாடசாலை) போன்ற இடங்களில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்காக  விசேடமாக இந்த கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அத்தோடு, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்காக பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டு மிகவும் நேர்த்தியான முறையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம் ஹனிபா தலைமையில் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

அரச அதிகாரிகள், வயோதிபர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் என அனைவரும் பெரும் ஆர்வத்துடன் தடுப்பூசி பெறுவதற்கு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.


அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை



















அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)














ஆயிஷா மகளிர் கல்லுாரி (தேசிய பாடசாலை)












அக்கரைப்பற்றில் ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கல்... அக்கரைப்பற்றில் ஆரம்பமான கொரோனா தடுப்பூசி வழங்கல்... Reviewed by Editor on July 24, 2021 Rating: 5