அக்கரைப்பற்றில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்டவர்களுக்கான Covid-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை சனிக்கிழமை (24) காலை 8.00 மணி முதல் ஆரம்பமாகும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.

இந்த தடுப்பூசி 30 வயதுக்கு மேற்பட்ட சகல இருபாலருக்கும் அத்தோடு மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளடங்களாக அனைவருக்கும் ஏற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாளை சனிக்கிழமை (24) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரை  காலை 8.00 மணி முதல் மாலை 4.00மணி வரை இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை), அக்/ அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) , ஆயிஷா பாவிகா மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆகிய இடங்களில் இடம்பெறவுள்ளதோடு, வருகை தருபவர்கள் கட்டாயம் தங்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதிபத்திரத்தை கொண்டு வருமாறும் சுகாதார வைத்திய அதிகாரி இப்பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

எனவே, அக்கரைப்பற்றைச் சேர்ந்த அனைத்து பொது மக்களும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள உரிய பாடசாலைகளுக்கு சென்று தங்களுக்குரிய தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதோடு, எம்மையும் எம் சமூகத்தையும் இந்த கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிகளையும் கடைப்பிடிக்குமாறும், எமக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாமல் பயன்படுத்தி கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் பொது மக்களை வினயமாக கேட்டுள்ளார்.

குறிப்பு - கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி நாளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஏற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.




அக்கரைப்பற்றில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது!!! அக்கரைப்பற்றில் நாளை முதல் தடுப்பூசி வழங்கப்படுகிறது!!! Reviewed by Editor on July 23, 2021 Rating: 5