(எம்.என்.எம்.அப்ராஸ்)
கொரோனா வைரஸ் காரணமாக பலர் தங்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக இழந்து மீண்டு வரும் இன் நிலையில் , அம்பாறை மாவட்டசெவிபுலனற்றோர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைககப்பட்டது.
மிக நீண்ட காலமாக சம்மாந்துறையை தளமாக கொண்டு இயங்கி வரும் அம்பாறை மாவட்ட செவிபுலனற்றோர் அமைப்பினர் தங்கள் நிலைமை குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் சம்மாந்துரை பிரதேச முக்கியஸ்தகரும் சம்மாந்துரை பிரதேச சபை சபை உறுப்பினர் அல்ஹாஜ். அஸ்பர் உதுமாலெப்பை அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து அஸ்பர் உதுமாலெப்பை அவர்கள் தனது சொந்த நிதியில் இருந்து அம்பாறை மாவட்ட செவிபுலனற்றோர் அமைப்பினருக்கு உலர் உணவுப் பொதிகளை சம்மாந்துரையில் உள்ள குறித்த அமைப்பின் காரியாலத்தில் வைத்து அதன் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு இன்று (31) வழங்கி வைத்தார்.
மேலும் இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சம்மாந்துறை தொகுதி முக்கியஸ்தகரும் அஸ்பர் உதுமாலெப்பை பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும்,பிரதேச சபை உறுப்பினர் அல் ஹாஜ் அஸ்பர் உதுமாலெப்பை (JP)அவர்களுக்கு அவ்வமைப்பு சார்பாக நினைவுச்சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
Reviewed by Editor
on
July 31, 2021
Rating:



