(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச உள்ளக அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பிராந்திய பொதுப்போக்குவரத்து வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் எண்ணக்கருவில் உருவாகும் மீனோடைக்கட்டு-அக்கரைப்பற்று மாற்று வழி கார்பட் வீதி நிர்மாணம் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று (31) சனிக்கிழமை தேசிய காங்கிரஸ் தலைவரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் வழிநடத்தலில், கௌரவ அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி அவர்களின் தலைமையில் மாநகர முதல்வர் செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி,மாநகர செயலாளர் ஹபீப் முஹம்மத்,மாநகர பொறியியலாளர் முஹம்மத் எம்.ஜே.ஆகில் அஹமத், மாநகர உத்தியோகத்தர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் எம்.ஐ.அஹமத் சஜீர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜே.எம்.வஃஸீர் உள்ளிட்ட பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைத்திட்டங்களின் தற்போதைய நிலை, மற்றும் புதிதாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள வேலைகள் போன்ற பல விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 31, 2021
Rating:



