நடப்பு கடன் மதிப்பீடுகள் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமையில் இன்று (22) நிதி அமைச்சில் நடைபெற்றது.
முதலீட்டாளர்கள், கடன் மதிப்பீட்டு முகவர் நிறுவனங்கள் மற்றும் வணிகம் சார்ந்தவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நம்பிக்கையை வளர்ப்பதற்கு முறையான திட்டத்தை வகுக்கவும் அதனை விரைவாக அமுல்படுத்தவும் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு நிதி அமைச்சர் வலியுறுத்தினார்.
இக்கலந்துரையாடலில், அமைச்சர்களான நிமல் சிறிபாலா டி சில்வா, பந்துல குணவர்தன, ரமேஷ் பதிரான, பிரசன்னா ரணதுங்க, உதய கம்மன்பில, அஜித் நிவார்ட் கப்ரால், ரத்னசேகர, மத்திய வங்கி ஆளுநர் மற்றும் மத்திய வங்கியின் பிரதிநிதிகள், நிதி அமைச்சின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
Reviewed by Editor
on
July 22, 2021
Rating:

