மலையக மக்களை சோகத்துக்கு உள்ளாக்கிய சகோதரி ஹிஷாலினியின் மரணத்தை கண்டிக்கும் முகமாகவும் இத்துயரத்தில் பாதிப்புகளுக்குள்ளான இச் சிறுமிக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் இன்று (22) வியாழக்கிழமை 6.00மணிக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பகவானில் இ.தொ.கா கொழும்பு இளைஞர் அணி தலைமையில் நிகழ்வொன்று இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் கொழும்பு வாழ் மலையக சொந்தங்கள் அணைவரையும் பங்கு கொள்ளுமாறும் இதன் போது மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்துமாறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொழும்பு இளைஞர் அணி கேட்டுக்கொள்கின்றது.
நாட்டில் காணப்படும் அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இந்த நிகழ்வு கொவிட் -19 சுற்று நிருபங்களுக்கு ஏற்ப நடைபெறும் என்றும் இக் கட்சியின் கொழும்பு இளைஞர் அணி தெரிவித்துள்ளது.
Reviewed by Editor
on
July 22, 2021
Rating:
