(றிஸ்வான் சாலிஹு)
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய உறுப்பினராக ஏ.சீ.எம்.நௌபர் அவர் பெயர் வர்த்தமானியில் தேர்தல் செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
சமூக சேவையாளரான முஹம்மட் நெளபர்,அக்கரைப்பற்றில் இறுதியாக நடைபெற்று முடிந்த மாநகர சபைக்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டவராவார்.
இக்கட்சியின் கொள்கையின் அடிப்படையில் உள்ளுராட்சி மன்றங்களுக்கு சுழற்சி முறையில் உறுப்பினர்களை நியமிப்பது என்ற புரிந்துணர்வின் படி இவர் அக்கரைப்பற்று மாநகர சபையின் உறுப்பினராக நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் இவரின் பெயரை கட்சி சிபாரிசு செய்து அதனடிப்படையில் மாநகர சபை உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மற்றுமொரு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினராக எம் .எம்.சித்தி ஜெலீலா அவர்களது பெயரும் வர்த்தமானியில் வெளிவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
July 27, 2021
Rating:



