(றிஸ்வான் சாலிஹு)
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுருக்குவலைகள் தொடர்பில் நேற்று (23) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமத்திரன், தவராசா கலையரசன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் இதில் கலந்து கொண்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உரையாற்றும் போது,
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஜனாசா குறித்தும் கோசம் எழுப்பினேன். ஆனால் இன்று பாராளுமன்ற உறுப்பினர் அவர்களின் வீட்டில் மரணமான சிறுமி குறித்து நீதி நிலை நாட்டபட வேண்டும் என குறிப்பிட்டேன் அது குறித்து பல விமர்சனங்கள் எழுகின்றன.
அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை .கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை. அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிங்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதுமில்லை. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி பாராளுமன்றத்தில் பேசுவேன் என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சாணக்கியன் தெரிவித்தார்.
