சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டம்!!!

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று பிரதேச மட்ட Covid-19 செயலணியின் குழுக்கூட்டம்  இன்று (10) சனிக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்.எப்.எம்.ஏ.காதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்குழுக்கூட்டத்தில் அக்கரைப்பற்று மாநகர பிதா கெளரவ அதாஉல்லா அகமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச சபை கெளரவ தவிசாளர் எம்.ஏ.றாசீக், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸான், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப், பிராந்திய தொற்று நோய் தடுப்பு பொறுப்பு வைத்திய அதிகாரி, பொலிஸ் உயரதிகாரி, 49 வது படைப்பிரிவின் உயர் அதிகாரி, வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டார்கள்.

அக்கரைப்பற்றில் தற்போதைய கொரோனா நிலவரம் தொடர்பிலும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டம்!!! சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நடைபெற்ற கூட்டம்!!! Reviewed by Editor on July 10, 2021 Rating: 5