ஜெயந்தியாய, புணாணையை சேர்ந்த அப்துல் றகுமான் இப்றாகீம் சாகிபு ஐக்கிய காங்கிரசின் ஜெயந்தியாய ரெதிதென்ன, புணாணைக்கான இணைப்பாளராக கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீதினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்ராஹீம் சாஹிப் அவர்கள் நீண்டகாலமாக கௌரவ மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளராவார். யுத்தத்தை முடித்து கிழக்குக்கு சுதந்திரத்தை தந்த மஹிந்த ராஜபக்ஷவை எப்போதும் விரும்பி வந்துள்ளார்.இவர் சமூகத்தின் ஏனைய கட்சிகளின் சுயநலப்போக்கை அடிப்படையிலேயே வெறுத்து உண்மையான, தூய்மையான அரசியலை ஆதரவு வைத்து வந்தவர்.
சமூகம், நாடு சார்ந்த பணிகளில்விருப்பமுள்ளவர். பிரதேச மக்களுடன் அன்பாகவும் பண்பாகவும் உறவினைப்பேணும் மக்கள் நலன் விரும்பும் மனிதன். கல்குடா தொகுதியின் அமைப்பாளர் சல்மான் வஹ்ஹாப் ஆசிரியரின் வழி காட்டலில் ஐக்கிய காங்கிரசில் இணையக்கிடைத்தமை பெரு மகிழ்வு தருவதாகவும் கட்சிக்காக எப்போதும் பாடுபட தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
