முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்று (06) செவ்வாய்க்கிழமை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் நடாத்தப்படுகிறது.
ஏறாவூர் 2, ஏறாவூர் 1A, ஏறாவூர் 6A ஆகிய கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் முதலாவது கொரோனா தடுப்பூசி இன்று காலை 8மணி முதல் ஏற்றப்படுகிறது. ஆகவே குறித்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பின்வரும் இடங்களில் தங்களது தடுப்பூசியை ஏற்றிக் கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள்...
ERAVUR -2 கிராம சேவகர் பிரிவு- ஏறாவூர் ஆதார வைத்தியசாலை
ERAVUR-1A கிராம சேவகர் பிரிவு-அறபா வித்தியாலயம்
ERAVUR-6A கிராம சேவகர் பிரிவு-அறபா வித்தியாலயம்
ஆகவே, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இன்று மேற்குறித்த உரிய இடங்களில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள் என்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அப்பிரதேச மக்களை கேட்டுள்ளார்.
