கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏன் சந்தேகம் - வைத்திய நிபுணர் முஸ்தாக்

18 வயதுக்கு மேற்பட்ட , 12 வாரத்தை தாண்டிய கர்ப்பிணித்தாய்மார்கள் அனைவரும் கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

யாருக்கு அடிக்க கூடாது?

1.காய்ச்சல் (38.5C) இருந்தால் குணமாகும் வரை தள்ளிப்போடவும்

2.வக்சீனுக்கு தீவிர ஒவ்வாமை Allergic நிலை ஏற்படக்கூடிய நிலையை உடையவர்கள்.  தடுப்பூசி அடிக்கும் நிலையத்துக்கு சென்ற பின்னர் அங்குள்ள வைத்தியக்குழு உங்களிடம் இதுபற்றி விசாரித்த பின்னரே உங்களுக்கான ஊசிகளை வழங்குவார்கள்.

3.ஏனைய அனைவரும் பெற்றுக்கொள்ளலாம்


கோவிட் 19 தொற்று கர்ப்பகாலத்தில் வந்தால் எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தலாம்?

1.கோவிட் நியுமோனியா ஏற்படும் வாய்ப்பும் , அதிதீவிர ICU பிரிவில் அனுமதிக்கப்படும் நிலையும் அதிகம்

2.குழந்தை குறைமாதத்தில் பிறக்கும் வாய்ப்பு ஏனையவர்களைவிட இருமடங்கு அதிகம்.

3.இதுவரையும் கோவிட் 19 வைரசு குழந்தைகளில் குறைபாடுகளை ஏற்படுத்தக்கூடிய நிலைமை இருப்பதாக கண்டறியப்படவில்லை.

சைனோபாம் மற்றும் பல தடுப்பூசிகளில் செயலிலக்கப்பட்ட தொற்று ஏற்படுத்தமுடியாத வைரசுபதார்த்தங்கள் செலுத்தப்படும். இதன்போது உடல் கோவிட் 19 வைரசுக்கெதிரான நோயெதிர்ப்புச்சக்தியை உருவாக்கும்.
வைரசு தொற்று ஏற்பட்டால் அதனை உடனடியாக உடலிலிருந்து அகற்றுவதற்கான ஏற்பாடுகள் உருவாகியிருக்கும்.

5செயலிலக்கப்பட்ட தடுப்பூசியால் கருவில் வளரும் குழந்தைக்கு எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தமுடியாது.

எனவே விரும்பியவர்கள் வக்சீன் வழங்கப்படும் போது அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள்.


Dr A C M Musthaq
Consultant Obstetrician and Gynecologist
BH Sammanthurai.




கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏன் சந்தேகம் - வைத்திய நிபுணர் முஸ்தாக் கொரோனா தடுப்பூசி போடுவதில் ஏன் சந்தேகம் - வைத்திய நிபுணர் முஸ்தாக் Reviewed by Editor on July 24, 2021 Rating: 5