CCTV பொருத்தியதையும், கழிவு முகாமைத்துவ விருது பெற்றதையும், சில விடுதிகளின் நிர்மானம் செய்ததையும் அபிவிருத்தியாக கருத முடியுமா? - டாக்டர் அஹமட் பரீட்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திகள் என உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்த விடயங்களை பார்க்கின்ற பொழுது ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்தி என்றால் என்ன என்பதை விளங்காதவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என தோன்றுகின்றது.

எனவே, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கான அபிவிருத்திகள் எவ்வாறு சுலபமாக பெறமுடியும் என்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் பொது வைத்திய நிபுணராக கடமையாற்றிய தற்போது மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றுள்ள டாக்டர் எஸ்.அஹமட் பரீட் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முதலில் விளங்க வேண்டியது என்னவென்றால், மத்திய அரசாங்கத்தில் கீழ் நேரடியாக இருக்கின்ற TYPE A  தர ஆதார வைத்தியசாலை சுகாதார அமைச்சிலிருந்து நேரடியாக ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் ரூபாய்களை பெறுகிறது. இந்த 10 மில்லியன் ரூபாய்களை நேரடியாக வைத்திய அத்தியட்சகர் தான் விரும்பிய திட்டமிடலில் தனது வைத்திய சாலையில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்ய வழங்கப்படுகின்றது.

மேலும் இந்த 10 மில்லியன் இல் இருந்து ஒரு தடவையில் ஆகக்கூடிய 50 லட்சம் ரூபாய்களை தனி ஒரு project க்கு ஒதுக்கக்கூடிய அதிகாரத்தையும் அந்த வைத்தியசாலையின் தலைவருக்கு வழங்கியிருக்கின்றது. 

இந்த பத்து மில்லியன் என்பது மட்டுப்படுத்தப்பட்டதல்ல, இதை விடவும் மேலதிகமாக தேவைப்பட்டால் குறிப்பிட்ட நிதி ஆண்டிற்குள் மீண்டும் ஐந்து மில்லியன் மற்றொரு ஐந்து மில்லியன் இவ்வாறாக சுகாதார அமைச்சிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். 

இந்த முறையை பயன்படுத்தி தான் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மற்றும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் தங்களது உள்ளக கட்டமைப்புக்கள் அதன் பின்னரான வைத்திய நிபுணர்களையும் பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள வைத்தியசாலைகளின் தலைவர்கள் தங்கள் வைத்தியசாலையின் நிதித் தேவைகளை அடைந்து கொள்ள கிழக்கு மாகாண சபையை நாடவேண்டியுள்ளது. இவர்கள் மாதாந்தம் 25000 பெறுமதியான பற்றுச்சீட்டுகளை கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பி அனுமதி பெற்று தனது வைத்தியசாலையின் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். மேலும் ஒரு தடவையில் இவர்கள் உச்சமாக 60,000 பெருமதியான project ஒன்றைத்தான் செய்ய முடியும். 

திருக்கோவில் வைத்தியசாலை சம்மாந்துறை வைத்தியசாலை போன்றவை கிழக்கு மாகாண சபையின் கீழ் இருக்கின்றன. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் இருக்கின்றது. 

திருக்கோவில் வைத்தியசாலை digital xray Mechines யினை   அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை விட  முதலில் பெற்றுக்கொண்டது.  இது சுகாதார அமைச்சினால் service upgrade project திட்டத்தின்கீழ் வழங்கப்படுவது.

சம்மாந்துறை வைத்தியசாலை  (Type B BH) ஒலுவில் வைத்தியசாலை ( Type C , District Hospital) ஆகியன நோயாளியை பதிவு செய்வதற்கு Digital Registration System , Digital Data base, Bar code Patients identification Card போன்ற சேவைகளை எத்தனை வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன.    

இந்த வைத்தியசாலைக்கு Digital Patient record system கொண்டு வரவேண்டுமென்று நான் வைத்தியசாலையின் தலைமையுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒருமுறை எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுத்தும் கூட அதற்குரிய ஆதரவு கிடைக்கவில்லையே.

ஆனால் இவர்கள் CCTV பொருத்திய தையும், கழிவு முகாமைத்துவ விருது பெற்றதையும், சில விடுதிகளின் நிர்மானம் செய்ததையும் அபிவிருத்தியாக கருதுகிறார்கள். 

புதிதாக கட்டிடத்திற்கு இடமில்லை எனக் கூறும் இவர்கள் வைத்தியசாலையின் பின்னால் இல்லாத கழிவு முகாமைத்துவம் என்ற போர்வையில் பெரியதோர் இடம் பிரயோசனமற்ற கிடைப்பதை மறந்துவிட்டார்கள்.  

உரிய திட்டமிடலும், மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கி பொருத்தமான project களை வருடத்திற்கு 10 மில்லியன் செலவில் செய்யக்கூடிய வசதிகள் இருந்தும் அபிவிருத்தி என்று செல்லக்கூடிய எதுவும் நடந்ததாக தெரியவில்லையே.  

நான் தயார் செய்து கொடுத்த Medical clinic Book கை கூட வைத்தியசாலை பணத்தில் print பண்ண முடியாது என தட்டி கழிக்கபட்டது. ஆனால் இதே வைத்தியசாலையில் வேறு ஒரு கிளினிக்குக்கு இந்த வைத்தியசாலையின் பணத்தின் மூலமாக clinic books print பண்ணி, clinic books வைப்பதற்கு புது அலுமாரி கூட வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது.  


காலத்துக்குக் காலம் சுகாதார அமைச்சினால் தானாக கிடைக்கின்ற வளங்களை பெற்றுக்கொள்வது தான் அபிவிருத்தி என்றால், இந்த வைத்தியசாலைக்கு அபிவிருத்திக்குழு என்று ஒன்று தேவை இல்லையே? அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



CCTV பொருத்தியதையும், கழிவு முகாமைத்துவ விருது பெற்றதையும், சில விடுதிகளின் நிர்மானம் செய்ததையும் அபிவிருத்தியாக கருத முடியுமா? - டாக்டர் அஹமட் பரீட் CCTV பொருத்தியதையும், கழிவு முகாமைத்துவ விருது பெற்றதையும், சில விடுதிகளின் நிர்மானம் செய்ததையும் அபிவிருத்தியாக கருத முடியுமா? - டாக்டர் அஹமட் பரீட் Reviewed by Editor on July 14, 2021 Rating: 5