(றிஸ்வான் சாலிஹு)
அதனடிப்படையில், அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலிம்நகர், 5ஆம் கட்டை அஸ்-ஸிபாயா வித்தியாலய மாணவர்களினதும் கல்வி நடவடிக்கையை இக் கொரோனா காலத்தில் மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை அதிபர் என்.எம்.சமீம் அவர்களின் அயராத முயற்சியால் அக்கரைப்பற்றைச் சேர்ந்த வெளிநாட்டில் தொழில் புரியும் தனவந்தரான எம்.ரீ.மனார் என்பவரிடம் USB மூலம் பாடத்திட்டங்களை பதிவேற்றி மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கையை மேம்படுத்துவதற்கான SMART TV ஒன்றினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று பாடசாலைக்கு அதனை அன்பளிப்பாக வழங்கி ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர் உதவி செய்துள்ளார்.
அதிபர் என்.எம்.சமீம் அவர்களின் தலைமையில் இன்று (03) சனிக்கிழமை காலை இவ் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வில், அக்கரைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி ஜனாப். கலீலூர்
றஹ்மான், பாடசாலை PSI இணைப்பதிகாரி ஜனாப். ஜூகைஸ் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், சில மாணவர்களும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அனைவரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஸ்-ஸிபாயா வித்தியாலயத்திற்கு Smart TV அன்பளிப்பு!!!
Reviewed by Editor
on
July 03, 2021
Rating:
