பாலத்தோப்பூர் மற்றும் சேருவில விகாரை வரையிலான காபட் வீதிக்கான அடிக்கல் நாட்டும் விழா திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கபில அத்துகொரல அவர்களின் மூதூருக்கான இணைப்பாளர் எஸ்.எம்.எம்.முபாரக் அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை (02) நடைபெற்றது.
மிக நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பாலத்தோப்பூர் மற்றும் சேருவில விகாரை வரையிலான பாதை சுமார் 247,000,000/= பெறுதியில் இதனை பூரணமாக செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ கபில நுவான் அத்துகொரல அவர்கள் பிரதம அதிதியாகவும் மற்றும் மூதூர் பிரதேச பொதுஜன பெரமுன அமைப்பாளர், தோப்பூர் மற்றும் மூதூர் உயர் பீட உறுப்பினர்களான ஜனாப். மக்பூன் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
