எதிர்வரும் செவ்வாய் கிழமை (31) தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அம்பாறை, கொண்டுவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திருத்த வேலைகள் இடம்பெற இருப்பதால் அக்கரைப்பற்று, இறக்காமம்,அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை மற்றும் தமனை பிரதேசங்களில் காலை 6 மணிமுதல் மாலை 5 வரை நீர் வழங்கல் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, நீர்ப் பாவனையாளர்கள் நீரை மிகவும் சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்துமானு நீர்வழங்கல் சபை பொதுமக்களை வினயமாக கேட்டுக் கொள்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் 06 பிரதேசங்களில் நீர் வெட்டு
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:
