(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே தடுப்பூசி ஏற்றிய ஒரு மாதம் பூர்த்தியானதும் 30 வயதிற்கு மேற்பட்டனைவருக்கும் இரண்டாவது தடுப்பூசி ஏற்றல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்தார்.
முதலாவது நாளான நாளை (30) திங்கட்கிழமை காலை 8:30 மணியிலிருந்து அக்கரைப்பற்று காதிரியா பள்ளிவாயல், நூறானியா பள்ளிவாயல் மற்றும் பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிஷா மகா வித்தியாலயத்திலும் தடுப்பூசி ஏற்றப்படும் என்பதோடு, அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு மாத்திரம் இரண்டாவது தடுப்பூசி ஆயிஷா பாலிகா (தேசிய பாடசாலை) கல்லூரியில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியினை பெற வருபவர்கள் தயவு செய்து உங்களுடைய அடையாள அட்டையையும் முதலாவது தடுப்பூசி பதிவு அட்டயையும் தவறாது கொண்டு வருமாறும் தெரிவிப்பதோடு, இச்சந்தர்பத்தை தவறாது பயன்படுத்துமாறு சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் இச்செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும் அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழுவினரும் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.
Reviewed by Editor
on
August 29, 2021
Rating:
