(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் கொரோனா பெரும் தொற்று தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் பதாகைகள் காட்சிப்படுத்தும் செயற்திட்டம் இன்று (30) கௌரவ பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக் தலைமையில் பள்ளிக்குடியிருப்பு ஜூம்ஆ பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.
நாட்டில் தற்போது பரவலாக ஏற்படுத்தி இருக்கும் கொவிட்-19 தொற்று குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் குறித்த பதாகைகள் அக்கரைப்பற்று பிரதேச சபையின் பிரதேசத்தின் பல இடங்களிலும் காட்சிப்படுத்தப்படவுள்ளது என்று பிரதேச சபை தவிசாளர் றாசீக் தெரித்துள்ளார்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லா அஹமட் ஸகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக். ரீ.எம்.எம். அன்சார், சபையின் கெளரவ உப தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள்,241 வது படைப்பிரிவின் தளபதி, பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர், உலமாக்கள், பிரதேச நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.
Reviewed by Editor
on
August 30, 2021
Rating:


