45 ஆயிரம் குழந்தைகள் இலங்கையில் கொவிட்டால் பாதிப்பு!!

இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொவிட்-19 தொற்றாளர்களில் எண்ணிக்கையில் சுமார் 45 ஆயிரம் பேர் குழந்தைகள் என லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதோடு, தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கு இடையில் மிகவும் வேகமாக கொவிட் தொற்று பரவி வருவதாகவும், ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வோர்ட் நிரம்பி உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.


45 ஆயிரம் குழந்தைகள் இலங்கையில் கொவிட்டால் பாதிப்பு!! 45 ஆயிரம் குழந்தைகள் இலங்கையில் கொவிட்டால் பாதிப்பு!! Reviewed by Editor on August 08, 2021 Rating: 5