60 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதலாவது தடுப்பூசி வழங்கும் இறுதி சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள் - டாக்டர் காதர்
(றிஸ்வான் சாலிஹு)
60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியினை ஏற்றுமாறு சுகாதார அமைச்சு பணித்துள்ளது.நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்படுவோரில் அநேகமானோர் 60 வயதிற்கு மேற்பட்டோராக உள்ளனர்.
இக்கொரோனா தொற்றிலிருந்து எமதுயிரை பாதுகாக்க தடுப்பூசியினை ஏற்றுவதே சிறந்த வழிமுறையாகும் என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தி வருகின்றது.
அதனடிப்படையில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் ஏற்கனவே முதலாவது கொரோனா தடுப்பூசி பெறத்தவறியவர்களுக்கு நாளை முதல் (26) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.
முதல்கட்டமாக அகக்கரைப்பற்று 13,14 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தோருக்கு காதிரியா பள்ளிவாசலிலும், 12,15 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்தோருக்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திலும் நாளை காலை 8.00 மணி முதல் 12.00 வரை தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது.
எனவே, தடுப்பூசியினை பெற வருபவர்கள் தயவு செய்து உங்களுடைய அடையாள அட்டையை தவறாது கொண்டு வருவதோடு, இதுவே இறுதி சந்தர்ப்பம், தவறவிடாதீர்கள் என்றும் டாக்டர் காதர் தெரிவித்துள்ளார்.
கீழ் குறிப்பிடப்படும் திகதி மற்றும் இடங்களில் தடுப்பூசி வழங்கப்படும்.
26/08/2021 - வியாழக்கிழமை
1. MOH OFFICE
GS DIVISION 12, 15
2. KATHIRIYA JUMMA MOSQUE
GS DIV 13, 14
27.08.2021 - வெள்ளிக்கிழமை
3. NOORANIYA MOSQUE
GS DIVISION
10, 01, 11, TD -3
4. AS SIRAJ SCHOOL
TD- 4, TD-1, TD-2
5. BADUR MOSQUE
TD-3, TD- 5
28.08.2021 - சனிக்கிழமை
6. AYESHA SCHOOL
AKP -2, 3, 17, 16
7. NEW MOSQUE
AKP - 4, 5, 6, 20
8. GRAND MOSQUE
AKP - 18, 19, 21
30.08.2021 - திங்கட்கிழமை
9. MOH OFFICE
10. PADDIYADIPITTY
11. PALLIKUDYIRUPPU
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:
