(றிஸ்வான் சாலிஹு)
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுவரையும் தடுப்பூசி பெறாத 60வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு இன்று (26) வியாழக்கிழமை முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வரை அக்கரைப்பற்றில் இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில், இன்று (26) வியாழக்கிழமை காலை முதலாவது நாள் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் காதிரியா வட்டாரத்திலும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் அவர்களின் வழிகாட்டலில் ஆரம்பமாகியுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள சகல மக்களும் கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற பாரிய அர்ப்பணிப்புடன் இரவு பகலாக களத்தில் இறக்கி தனது நிர்வாகத்தின் கீழுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் உதவியுடன் சேவையாற்றி வரும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் அவர்களின் சேவையை பாராட்ட வேண்டிய கடமைப்பாட்டில் எமது சமூகம் இருக்கிறது.
இவருக்கு இன்னும் பலமூட்டுவதற்காக அக்கரைப்பற்றில் ஸ்தாபிக்கப்பட்ட அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்துவ குழு கைகோர்த்து உள்ளமையும் இவரின் பணியின் வெற்றிக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். இந்த அனர்த்த முகாமைத்துவ குழுவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த கல்வியலாளர்கள், புத்திஜீவிகள், அரச உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள், உலமாக்கள் இன்னும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
August 26, 2021
Rating:



