புதிய பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியில்  புதிய பாடநெறிகளுக்கான விண்ணப்பம் மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

1.கையடக்க தொலைபேசி திருத்துனர்

( Mobile Phone Repairing Craftsman)

NVQ 3/4


2. அலுமினிய வடிவமைப்பு

( Aluminium Fabrication)

 NVQ 4

 மேற்குறித்த துறைகளில் வேலை செய்வதற்கான திறனுள்ளவர்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் எம்மிடம் கோரியுள்ளதால் வேலை வாய்ப்பினை இலகுவில் பெறமுடியும் என்று கல்லூரியின் தொழில் மற்றும் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்ரின் தெரிவித்துள்ளார்.

அத்தோடு  சுயதொழிலை ஆரம்பிப்பதற்க்கான நிதி வசதிகளை பெறுவதற்கான ஏற்பாடுகளும், நிபணதா சிசு சவிய திட்டத்தின் கீழ் மாணவர் உதவித் தொகையும் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இப்பாடநெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2021.08.30 என்பதோடு, 0705174343 / 0770174343 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.




புதிய பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல் புதிய பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல் Reviewed by Editor on August 16, 2021 Rating: 5