அதிபர் கஸ்ஸாலி அவர்களுடைய இழப்பு கல்குடா கல்விச் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும் - முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்
வாழைச்சேனை வை அஹமட் வித்தியாலயத்தினுடைய அதிபராக கடமையாற்றுகின்ற சேர். கஸ்ஸாலி அவர்களுடைய மரணச் செய்தி கேட்டு நான் மிகுந்த கவலை அடைகின்றேன். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம். எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தன்னுடைய அனுதாப செய்தியில்,
மர்ஹூம் ஹஸ்ஸாலி அதிபராக பல வருடங்கள் கடமையாற்றி கல்விக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த ஒரு சகோதரர். என்னோடு இருந்து அரசியல் அதிகாரத்தினூடாக பல்வேறுபட்ட பணிகளை கல்குடா தொகுதியினுடைய முன்னேற்றத்திற்காக செய்த ஒருவர். பல பாடசாலைக் கட்டடங்கள், பல்வேறு நியமனங்கள் போன்ற பணிகளுக்கு என்னோடு ஒத்துழைப்பாக செயற்பட்ட ஒரு சகோதரர். அவரது மரணச் செய்தி கேட்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன்.
அவருக்காக நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.அவரது பணிகளுக்காக அல்லாஹ் சிறப்பான கூலியைக் கொடுக்க வேண்டும். அவரது கப்றை அல்லாஹ் சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்ற வேண்டும். அன்னாரது குடும்பத்திற்கு மன ஆறுதலையும்,வலிமையையும் கொடுக்க வேண்டும். என்று முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டார்.
Reviewed by Editor
on
August 19, 2021
Rating:
