மூதூர் இளைஞர்களின் தயாரிப்பில் உருவான 'தவறு' திரைப்படத்தின் வெளியீட்டு விழா!

(ஹஸீன் முஹமட்)

மூதூரின் கலைத்துறையிலும் மற்றுமொரு மைல்கல்லாக  'தவறு' திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்று (01) இரவு 8:30 மணியளவில் மூதூர் Pearl Grand மண்டபத்திலே இத்திரைப்பட வெளியீட்டு விழா நிகழ்வு அதன் தயாரிப்பாளரும், கதாயாநாயகனுமான எச்.பீ.அர்சத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சமூகத்தில்  ஊடுருவியிருக்கும் Drugs பாவனை மற்றும் அதன் பாரதூர விளைவுகளை சித்தரிக்கும் காட்சிகளை உள்ளீர்த்து அமைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு மணித்தியால கதைக்களக் காட்சிகள் இறுதி வரை இப்படத்தில் விரு விருப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 

புஹாரி அர்சத்தின் தயாரிப்பு மற்றும் நடிப்புடன் இளம் இயக்குனர் ரஸ்லி அக்தாப் இயக்கத்தில்,சதீர் எடிட்டிங், எஸ்.டீ.மருதமுனை இசையில், டீன் ஸ்டூடியோ ஒளிப்பதிவில்  'தவறு' திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் அதிதியாக இலங்கை நிருவாக சேவையின் ஓய்வு நிலை அதிகாரியும், மூத்த எழுத்தாளருமான எம்சீ.எம்.ஷெரீப் அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். மேலும் இப்படத்தின் பாடலாசிரியரும், இலக்கியவாதியுமான ஏ.எஸ்.அப்துல்லா அவர்களும் கலந்து கொண்டு திரைப்படம் பற்றிய விமர்சனத்தை முன்வைத்தார்.

இவர்களுடன் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த ஒற்றைச் சிறகு படத்தின் இயக்குனர் ஜனா மோகேந்திரன்,தயாரிப்பாளர் முரளி உற்பட மூதூரின் கலைஞர்கள்,ஊடக பிரமுகர்கள் மற்றும் இத் திரைப்படத்தின் நடிகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.












மூதூர் இளைஞர்களின் தயாரிப்பில் உருவான 'தவறு' திரைப்படத்தின் வெளியீட்டு விழா! மூதூர் இளைஞர்களின் தயாரிப்பில் உருவான 'தவறு' திரைப்படத்தின் வெளியீட்டு விழா! Reviewed by Editor on August 02, 2021 Rating: 5