8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக…

(சலீம் றமீஸ்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்களின் தலைமையில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள, கலாநிதி ஆர்.ஏ. சர்ஜுன் அவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 04.08.2021 (புதன்) இணைய வழியில் நடைபெற இருக்கின்றது. 

“இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக நம்பிக்கைசார்ந்த சமூக ஒத்திசைவை ஊக்குவித்தல்”எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெற உள்ளது.

இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி துணைப் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் ஸுனாவரி லோங் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

அத்தோடு, இவ்வாய்வரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட விடுக்கின்றது என்பது விஷேட அம்சமாகும் என்று ஆய்வரங்கின் செயலாளர் கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.


8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக… 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக… Reviewed by Editor on August 02, 2021 Rating: 5