சுகாதாரதுறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நற்பிட்டிமுனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் பிராந்திய சுகாதார பிரிவுகளில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில், கல்முனைப் பிராந்திய இராணுவ மேஜர்சாந்த விஜேயகோனின் ஒத்துழைப்புடன் நற்பிட்டிமுனை பகுதியில் தெற்கு சுகாதார உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி யினை இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்துதடுப்பூசியினை பெற முடியாதவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (28) இடம்பெற்றது.

இதன் போது தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், கிராம அலுவலர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.





சுகாதாரதுறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நற்பிட்டிமுனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி சுகாதாரதுறை மற்றும் இராணுவத்தினர் இணைந்து நற்பிட்டிமுனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி Reviewed by Editor on August 28, 2021 Rating: 5