பனங்காடு வைத்தியசாலையில் வைத்தியரை தாக்கிய சம்பவமொன்று நேற்று (17) செவ்வாய்க்கிழமை பிற்பகல் வேளையில் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
நேற்றைய தினம் வெடிபொருட்கள் வெடித்ததில் கணவனும் மனைவியும் காயமடைந்து குறித்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அங்கு இதற்குரிய சிகிச்சை செய்வதற்கு வைத்திய சாலையில் போதியளவு மருத்துவ வசதி இன்மையால் மேலதிக சிகிச்சைக்காக வேறு வைத்தியசாலைக்கு அனுப்ப வைத்தியர் தயாரான போது அவர்களுடன் வந்த நபர் தகாத வார்த்தைகளால் கூறி வைத்தியரை தாக்கியுள்ளார்.
இவ் சம்பவத்துக்கு வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளதோடு ஆலையடிவேம்பு பிரதேச மக்களுக்கு சேவைகளை வழங்கிவரும் பிரதான வைத்தியசாலையாக இருந்த போதிலும் இவ் வைத்தியசாலையில் பௌதிக வளம் மற்றும் ஆளனிபற்றாக்குறை காணப்படுவதாலயே மக்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுவதாக வைத்தியசாலை அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாற செயற்பாடுகள் இனியும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமானால் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை (பௌதிகவளம், ஆண் சீற்றூழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர்) நிவர்த்தி செய்ய உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ள அபிவிருத்தி சங்கத்தினர் வைத்தியரினை தாக்கியவருக்கு விரைவாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Reviewed by Editor
on
August 18, 2021
Rating:
