பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து முஸ்லிம் பள்ளிவாசல்களின் நிர்வாகக்குழுவினர்களுடனான சந்திப்பொன்று பதுளை அல்-அன்வர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஊவா மாகாண ஆளுநர் கெளரவ ஏ.ஜே.முஸம்மில் அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் முன்னெடுக்கப்படும் தேசிய தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டதுடன், தடுப்பூசி தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படும் தவறான புரிதல் காரணமாக இதுவரை கொவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாமல் தயக்கம் காட்டும் மக்களுக்கு, தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்தோடு, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் அரச நிறுவனங்கள் மற்றும் பொது போக்குவரத்துகளை பாவிக்கும் போது தடுப்பூசி அட்டைகள் சமர்ப்பிக்கும் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
Reviewed by Editor
on
August 06, 2021
Rating:


