ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை அமர்விலும் கலந்து கொண்டார்!!

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சென்ற போது சபை முதல்வர் தினேஷ் குணவர்தன மற்றும் ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் அவரை வரவேற்றனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற சபா மண்டபத்துக்கும் வருகை தந்தனர். 

சபா மண்டபத்தில் அமர்ந்திருந்து - நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைக்கப்பட்டிருந்த வாய்மூல கேள்விகளை ஜனாதிபதி செவிமடுத்ததோடு பின்னர், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)






ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை அமர்விலும் கலந்து கொண்டார்!! ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு விஜயம் செய்து சபை அமர்விலும் கலந்து கொண்டார்!! Reviewed by Editor on August 04, 2021 Rating: 5