சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாஅதிபரும், முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹண கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவரின் உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் படங்கள் மற்றும் காணொளிகள் என்பன போலியானவை என காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அவரின் உடல்நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் ரோஹண தொடர்பில் வெளியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:
Reviewed by Editor
on
August 25, 2021
Rating:
